Monday, 22 May 2017

போகர் ரகசியம்....

சித்தர்கள் இராச்சியம் ▼ 18 Feb 2013 போகர் அருளிய மிருக வசியம்! சமீப நாட்களில் வன விலங்குகள், மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வந்து விடுவதாகவும், அதனால் மக்களுக்கு துயர் உண்டாவதாகவும் பல செய்திகளை பத்திரிக்கைகளீல் பார்க்க முடிகிறது. நாம் அவற்றின் வாழ்விடங்களான வனப் பகுதிகளை ஆக்கிரமித்து குடியேறியதுதான் இத்தகைய நிலைக்கு காரணம். முற்காலத்திலும் கூட மனிதன் தன் தேவைகளுக்காக அடர் வனங்களின் ஊடே வாழ்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் மிருகங்களோடு இணக்கமாயிருக்கும் உத்திகளை கைக் கொண்டிருந்தனர். இத்தகைய உத்திகளை நம் முன்னோர்கள் மிருக வசியம் என்றழைத்தனர். இன்றும் கூட மலைவாழ் மக்கள் இத்தகைய சில உத்திகளை தமது அன்றாட பழக்கத்தில் வைத்திருக்கின்றனர். மனித நடமாட்டமில்லாத மலைகளிலும், காடுகளிலும் உறைந்திருந்த நம் சித்தர் பெருமக்களும் இத்தகைய பல மிருக வசியங்களை அருளியிருக்கின்றனர். அவற்றில் சில வசிய முறைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று போகர் அருளிய மிருக வசியம் ஒன்றினை பார்ப்போம். இந்த தகவல் “போகர் 7000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. தானென்ற மூலிநரி விரட்டிக்கப்பா தப்பாமா லாதித்த வாரந்தன்னில் வண்மையுடன் ஓம்சடா சடாவென்று ஆனென்ற வாயிரத்தெட் டுருசெபித்து வவ்வேரை மறுவாரம் பிடுங்கிக்கொள்ளே குறியான வேரையுநீ பிடுங்கிக்கொண்டு நள்ளுவாய் நிழலுலர்த்திக் கொண்டு நலமான செப்புகுளிசத்திலடைத்துக்கொள்ளே அணிவாய் முன்னுருவே தியானஞ்செய்து ஆச்சரிய மந்திரத்தான் மிருகஞ்சேராது. நரிவிரட்டி என்றொரு மூலிகை உண்டு. இதற்கு “நரிமிரட்டி”, “கிலுகிலுப்பை”, “பேய்மிரட்டி” என வேறு பெயர்களும் உண்டு. இந்த மூலிகையை தேடி கண்டு பிடித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில் அந்த செடியின் முன்னர் அமர்ந்து "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை 1008 தடவைகள் செபித்துவிடவேண்டுமாம். பின்னர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியினை பறித்து அதன் வேரை பிடுங்கி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். செம்பினால் ஆன தாயத்து ஒன்றினை செய்து, அதில் காயவைத்த நரிமிரட்டி வேரினை அடைத்து, "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை முன்னூறு தடவைகள் செபித்துக் பின்னர் அணிந்து கொள்ள வேண்டுமாம். இவ்வாறு அணிந்தவரை மிருகங்கள் நெருங்காது என்கிறார் போகர். ஆச்சர்யமான தகவல்தானே! சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..

இரும்பை செம்பாக்கும் ரசவாதம்......

இரும்பை செம்பாக்கும் ரசவாதம் இந்த ஆக்கம்தான் வலைப் பதிவின் எண்ணூறாவது பதிவாய் வந்திருக்க வேண்டியது. கடைசி நேரத்தில் கவனித்தமையால் எண்ணூறாவது பதிவு எனது தனிப்பட்ட எண்ணப் பகிர்வாய் அமைந்தது விட்டது. இனி இரும்பை செம்பாக்கும் வித்தையை பார்ப்போம். சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே “செம்பு” உயர்வான ஒன்றாக கூறப் பட்டிருக்கிறது. எத்தனை உயர்வென்றால் ஆதி சித்தனாகிய சிவனின் அம்சமாகவே செம்பு உருவகிக்கப் பட்டிருக்கிறது. தங்கத்தையும் வெள்ளியையும் விட செம்பை உயர்வாகச் சொல்கிறார் போகர்.உயர் உலோகங்கள் என கருதப்படும் தங்கமும், வெள்ளியும் உடல் என்றால் அவற்றின் உயிரைப் போன்றது செம்பு என்கிறார் போகர். இத்தகைய செம்பின் சிறப்பு, தன்மை, வகைகள் பற்றி முன்னரே ஒரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன். அந்த தகவலை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். இரச வாதத்தில் செம்பை பொன்னாகவும், பொன்னை செம்பாகவும் மாற்றும் பல்வேறு முறைகள் நமக்கு கிடைக்கிறது. எனினும் இன்றைய பதிவில் இரும்பைச் செம்பாக்கும் ஒரு முறையினை நாம் பார்க்க இருக்கிறோம். ஆம் பார்க்கத்தான் போகிறோம். முதல் தடவையாக ஒரு செயல் முறையினை வீடியோவாக பகிரும் முயற்சி இது. இரும்பினை செம்பாக்கும் இந்த தகவல் கோரக்கர் அருளிய "கோரக்கர் மலைவாகடம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. சதுரகிரி மலை தொடர்பான தொடரில் இந்த தகவலை பற்றி ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். தேவையான பொருட்கள்: மெல்லிய இரும்பு கம்பி/ இரும்பு ஊசி, கல் தாமரையின் வேர். இரும்பு ஊசி எளிதில் கிடைத்தாலும், கல்தாமரை வேருக்காக பல இடங்களில் தேடி அலைய வேண்டியதாயிற்று. ஒரு வழியாக நீர்கொழும்பு பகுதியில “குடபாடு” என்னும் பகுதியில் கிடைத்தது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. ஒரு பௌர்ணமி நாளில் சூரிய உதயத்திலிருந்து மூன்று நாழிகைக்குள் கல்தாமரை / கற்றாமரை மூலிகைச் செடிக்குக் சாபநிவர்த்தி செய்து அதன் வேரினை சேகரித்துக் கொண்டு வந்தேன். இனி செயல் முறையினை பார்ப்போம். இரும்பு ஊசியின் மேற்பரப்பை தேய்த்து சுத்தம் செய்து, நன்கு பழுக்க சூடேற்றிய பின்னர் அதனை அப்படியே ஆற விடல் வேண்டும். ஆறிய பின்னர் அந்த ஊசியினை கல்தாமரை வேரில் கவனமாய் சொருகி வைக்க வேண்டும். மூன்று சாம நேரத்திற்கு பின் அந்த ஊசியை எடுத்தால் அது செம்பாக மாறியிருக்கும். இந்த செயல் முறையினை கீழே உள்ள ஒளித்துண்டில்(வீடியோ) காணலாம். மூலிகையில் நகம் படக் கூடாது என்பதற்காக இந்த செயல்முறைகளின் போது நான் கையுறைகளை ( surgical gloves ) பயன்படுத்தியிருக்கிறேன். சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..

போகர் அருளிய கருநெல்லி......

போகர் அருளிய "கருநெல்லி" கற்பம் நெல்லி "Emblica offinalis" குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது மலைப் பகுதிகளில் வளரும் இயல்புடையது. தற்போது இவை சமவெளிகளிலும் பயிரிடப் படுகிறது. இவற்றில் அரி நெல்லி, பெரு நெல்லி என இரு வகைகள் உண்டு. சித்தரியலில் நெல்லி மரம் ஆதி சிவனின் அம்சமாகவே கூறப் படுகிறது. முக்குற்றங்களையும் போக்கும் ஆற்றல் நெல்லிக்கு உண்டென கூறியிருக்கின்றனர். நெல்லி மரத்தின் இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை என எல்லா பாகங்களும் அரு மருந்தாய் பயன்படுகின்றன. பெருநெல்லியின் ஒரு வகைதான் கருநெல்லி ஆகும். கருநெல்லி மரத்திற்கு செல்வ மரம் என்றொரு பெயரும் உண்டு. இது மிகவும் அரிதானது, மலைபிரதேசங்களில் மட்டுமே விளையக் கூடியவை. பலரும் நிணைப்பதைப் போல் இந்த வகை நெல்லிக்காய்கள் கருப்பாய் இருப்பதில்லை. அதே நேரத்தில் சந்தையில் கிடைக்கும் பெருநெல்லியின் அளவில் இருந்தாலும் இதன் நிறம் சற்றே மஞ்சள் பூத்த பசுமை நிறத்துடன் இருக்கும். இது எளிதில் கிடைப்பதில்லை. நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிடலாம். கருநெல்லி மற்றெந்த நெல்லிக்காய்களை விடவும் சிறப்பான மருத்துவத் தன்மை கொண்டவை. இத்தனை சிறப்புகள் வாய்ந்த எளிய கருநெல்லி கற்பம் ஒன்றினை இன்று பார்ப்போம். போகர் அருளிய "போகர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. ஏமமாங் கருநெல்லி மலைதோருமுண்டு எழிதாகக் கிடையாட்டால் தேடிப்பெற்று நாமமாம் நாற்பதுநாள் பாலிற்கொள்ளு நமன்வந்து நாடாமல் நடுங்கிப்போவான் தாமமாஞ் சட்டையெல்லாங் கக்கிப்போடும் தங்கம்போல் மேனியுமாய்த் தளுக்காய்க்காணும் ஆடவே கருநெல்லிப் போக்குச்சொல்ல அரன்காணார் யாந்தானுங் கண்டிலேனே. தினமும் கருநெல்லியை பாலுடன் சேர்ந்து உண்ண வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாற்பது நாட்கள் உண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறி, உடலானது தங்கம்போல் மின்னும் என்கிறார். மேலும் எமன் கூட நெருங்க மாட்டான் என்றும் சொல்கிறார். இந்த கற்பமுறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை. மிகவும் எளிதான, மலிவான கற்பம். இதனால் உடலுக்குக் கிடைக்கும் பலனோ மகத்தானது.

அஷ்டமாசித்துக்கள்........

ஷ்டமாசித்துக்கள்...

அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது. ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது. திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

பிராத்தி:
  எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல். அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்:
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல். திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.